உதவும் நினைவு

நேரம் காலம் பார்க்காமல்,
நாள் நட்சத்திரம் தேடாமல்,
உடம்பின் தேவையே சரியென்று,
நாம் வாழ்ந்த நாட்கள் பல உண்டு.

வாழ்க்கையின் வசதி,
உடம்பு தந்த அசதி,
கடந்து வந்த பாதை,
தந்ததோ வேதனையும் சோதனையுமே!

நினைத்துப் பார்த்து ,
நினைவில் கொண்டவரும் உண்டு,
நிலையை மாற்றி ,
நலம் காத்தவரும் உண்டு.

அன்பு, பாசம் ,
அனைத்தும் மனத்துள் வைத்து,
இனி இருக்கும் காலம்
இனிமை சேர்க்க ,

பேச்சிலே கனிவு,
கொடுப்பதிலே நிறைவு,
உதவி கேட்டோருக்கு, உடன் செய்திடல் என்று,
உயர்வு கொள்வோம்.

நாளை என்பது நம்மிடமில்லை,
நடப்பது நலமாயிருக்க,
நினைப்பது உயர்வாகட்டும்,
செய்வதும் சிறப்பாகட்டும்.

எழுதியவர் : arsm1952 (3-Nov-16, 12:29 pm)
பார்வை : 184

மேலே