தமிழ்நாடு அறுபது

மொழிவாரி மாநிலங்கள் பிரித்த நாள்!
தமிழர்க்கு நாடொன்று கிடைத்த நாள்!
மொழி இனம் காத்திட வழிசெய்தநாள்!
திராவிட தாய்மொழிக்கு கூடொன்று கட்டியநாள்..!

உலகத்திற்கே கலாச்சாரத்தை வகுத்த மானுடனுக்கு
வள்ளுவனையும் கம்பனையும் ஈன்ற தாயுக்கு
மகுடம் சூட்ட கட்டிய நாடு!
பலர் இரத்தத்தை நீராய் பாச்சி
வளர்த்தெடுத்த நாடு! எங்கள் தமிழ்நாடு!

நாடு கண்டு கடந்தது அறுபதாண்டு!
சமத்துவமும் சகோதரதுவமும் வளர்ந்ததுண்டு!
மொழிகாப்பே நாங்கள் செய்தத் தொண்டு!
செம்மொழியே எங்களுக்கு கிடைத்த பண்டு..!

தீண்டாமை நாங்கள் பெற்ற சாபமோ!
மாதவாதம் தமிழரை வீழ்த்த வந்த கோடரியோ.!
இவையாவும் எம்மண்ணில் பிறந்தவை அல்ல;
எமை வீழ்த்தவந்த ஆரிய சதியேபுள்ள!

தீந்தமிழ் சொல்லால் தீட்டிய நாடடா
இலக்கணம் இலக்கியமே எங்கள் உயிரடா
வந்தோரை வாழவைக்கும் நாடெங்கள் நாடு!
பார்பன வஞ்சகத்தால் வீழ்ந்துபோன தமிழ்நாடு!

முத்தமிழ் நாட்டிற்கு முத்தான மும்மூர்த்திகளாம்!
பெரியார் அண்ணா கலைஞரெனும்
தமிழ்மூர்த்திகளாம்!
அவர்கள் கரம் பிடித்தே வாழ்ந்திடுவேம்!
தமிழர் பெருமைதனை காத்திடுவேம்.!

வீரமணி கி
வயலூர்
விருத்தாசலம்

எழுதியவர் : வீரமணி கி (4-Nov-16, 12:16 am)
பார்வை : 1091

மேலே