மழை

கடல்நீரை உறிஞ்சி குடிச்சி மேகமான நீயே மழையாய்
மண்ணில் வர உனக்காகதானே காத்துக்கிடக்கின்றோம்.
வெச்சபயிர் எல்லாம் கருகாம இருக்க வானத்தை பார்த்துதான
தினம் மண்மேல காத்துக்கிடக்கின்றோம் .
சோறுபோட்ட பூமி இப்போ வறட்சிலே சாகமா இருக்க
உனக்காகதானே மண்மேல காத்துக்கிடக்கின்றோம் .
குடிநீருக்கு பஞ்சம் வரம குலசாமியா நீ வந்து இறங்க
உனக்காகதானே மண்மேல காத்துக்கிடக்கின்றோம்.
சாரல் மழையா நின்னுடாம சனங்க மனசு மகிழிந்துட
உனக்காகதானே மண்மேல காத்துக்கிடக்கின்றோம்.
சேதியேதும் சொல்லாம மௌனமா நீ இருக்க தாயி
உனக்காகதானேஇன்னும் மண்மேல காத்துக்கிடக்கின்றோம்.

எழுதியவர் : திவ்யஸ்ரீ (3-Nov-16, 3:00 pm)
பார்வை : 489

மேலே