ஆசிரியத் தாழிசை

குருகு கொடியுடன் கோல மயிலில்
மருவு மடியார் மனக்குறை தீர்க்க
வருவா னழகன் வடிவே லவனே !

திருப்புக ழமுதைத் தினமும் பருகிட
விருப்புட னாடி வினைகள் களைய
வருவா னழகன் வடிவே லவனே !

திருவடி பணிய சிந்தை குளிர்ந்தே
திருமுக மாறுடன் தேவிய ரோடு
வருவா னழகன் வடிவே லவனே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Nov-16, 10:17 pm)
பார்வை : 72

மேலே