கனவு
மலர் மொட்டு வெடித்திட
நீ பட்டு உடுத்திட
மங்கையவள நடந்து
வந்த கோளம்...!
உன்னை கண்டதும்
மயில் தோகைவிரித்தாடும்...!
இடை தொட்டு தழுவிட
இமை சொக்கி கிறங்கிட
இடையில் குடமாய்
மாறினேன் நானும்!
நீயின்றி கசப்பாய்
கசக்குது தேனும்...!
பொட்டொன்று
வைத்திட்ட வட்டநிலா...!
என் நிம்மதிக்கு
இம்சைதரும் கருப்பு உலா...!
தீண்ட தீண்ட
இனிக்கும்
காதோரம் முடிகள் பலா...!
நித்தம் தினம்
ஏங்கி தவிக்கும்
நான் பாடும பாட்டு
உன்னில் விழாமலா...??!!
நித்திரையில் கனா
தூது வருவது புரியாமலா...!
ஏக்கத்திற்கு
முற்றுப்புள்ளி
போடாமலா..??!
ஏன்டி ...!!!
என் கவிதையில் குளிர் காய்கிறாய்!
என் கண்களுக்கு பொடா போடுகிறாய்!
என் காதலோடு போட்டியிடும்
தாஜ்மகாலை தரைமட்டமாக்குகிறாய்!
கண்ணால் கையசைக்கிறாய்!
கண்மூடி
கழுத்து நீட்டடி என்றால்
கம்பி நீட்டுகிறாய்...!
கண்விழித்து பார்த்தால்
அத்தனையும் கனவு!
என் காதலுக்கு-நீ
தந்திட்ட நோவு...!
வீரமணி கி
வயலூர்
விருத்தாசலம்.

