உனக்கான காத்திருப்புக்கள்
பிறை நிலாவை காணும்
போதெல்லாம்
பௌர்ணமியாய்
உன்னை பற்றிய சிந்தனைகள்
கும்மிருட்டை காணும்
போதெல்லாம்
வெளிச்சமாய் உன்னை
பற்றிய நினைவுகள் ....
பேருந்து பயணங்களில்
எல்லாம்
உன்னை பற்றிய
கவிதைகள் ....
தீண்டும் காற்றில்
எல்லாம்
நீ தூது விட்ட தடயங்கள் ...
நீளும் வாழ்வில்
எல்லாம்
உனக்கான காத்திருப்புகள் ...
வரிகளுடன்
கிரிஜா.தி