ஓட்டுநர்
கலர் கலராய் உடைகள் அணிந்து திரியும் உலகில்,
காக்கிச்சட்டை விரும்பி அணியும் நண்பன்..
தன் உயிரை துச்சமென எண்ணி, தன்னை நம்பி வந்தவரை கரைச்சேர்க்கும் கலங்கரை விளக்கம்..
ஆதி சிவனும் கண்மூடி தியானம் செய்வான், இவன் விழிமூடி சென்றால் யாரும் சிவனையே ரசிப்பதில்லை நிரந்தரமாய்..
இருளும் விலகி சென்று பாதைவிடும் இவன் இசைக்கும் ஒலியில்...
இவன் அறிந்து வைத்திருக்கும் குறுக்குவழிகளைக்கண்டு செயற்கைக்கோளும் மறைந்து கொள்கிறது அவமானத்தில் ....
இவனால் தான் இந்த உலகம் அன்பை பரிமாறி கொள்கிறது அனுதினமும்.
இவனின்றி போனால் உறவுகள் யாவும் பகைமையாய் திரியும்...
பள்ளி செல்லும் குழந்தையும்.. பல்லாக்கில் உறங்க செல்லும் முதியவனும் இவனை நம்பியே...
பொறுமையின் சின்னமாய் திகழும் எங்கள் அன்பு வாகன ஓட்டிகளுக்கு இந்த தாடி இல்லா கேடி கவிஞனின் இந்த வரிகள் சமர்ப்பணம்...
இவண்
பா.சுரேந்திரகுமார் ..