நட்பு
நெஞ்சுக்குள்
பூத்த பூ
பாசம் கமழும்
பூ நட்பு ....
நீ நான் மறந்து
காலம் கடந்து
வாழும் ஒரே உறவு....
தனக்காய் யோசிக்காமல்
நமக்காய் யோசிக்கும்
நல்ல உறவு ....
நல்ல நட்பு நம்மை
தன்னிலை மறக்க வைக்கும் ...
சின்ன சின்ன
குறும்புகள்
அதில் குழந்தையானோம் ....
செல்ல சண்டை அதில்
வயதை மறந்து போனோம் ...
முகம் பார்த்து மனதை
புரிந்து கொள்வதில்
நட்புக்கு நிகர் நட்பே...
நட்பின் பொய்க்கோபம்
இனிக்கும்
மெய்க் கோபம்
கொள்ளும் ...
புரிதல் நெகிழ்ச்சியாய்
இருக்கும்
புரியாமை வாழ்க்கை
வெறுத்து போகும் ...
காதலில் தோற்றால்
வாழ்க்கையின் அர்த்தம்
புரியும் ...
நட்பில் தோற்றால்
எல்லா உறவுகளையும்
சந்தேகம் கொள்ளும் ....
நட்பால் வாழ்வோம்
நட்புக்காக வாழ்வோம் ...
பொன்னகை மெருகெற்றாது
புன்னகை அழகுட்டும்
வாழ்க்கையை...
புன்னகையை அணியுங்கள் ...
நட்புடன்,
கிரிஜா.தி