ஈசனைத் தொழுவாய் நெஞ்சே

பிறையுடன் நதியும் சூடும்
****பித்தனின் புகழைப் பாடி
முறையுடன் பக்தி செய்தால்
****முக்கணன் விரும்பி யேற்று
நிறைமனத் தோடு வந்து
****நிழலெனத் தொடர்ந்து காப்பான்!
இறையருள் கிட்ட நாளும்
****ஈசனைத் தொழுவாய் நெஞ்சே!
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)