பணம் வேண்டாம்

எப்பொழுதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் உணவகம் அது
மதிய நேரங்களில் ஆர்டர்களும் , உணவு உண்பவர்களின் எண்ணிகையும் அதிகமாகவே இருக்கும்
இருக்கை அறைகளும் நிரம்பி வலியும்
ஆனால் இன்று மட்டும் ஏனோ ஊசியின் சத்தத்தை கூட கிழே போட்டால் கேட்கும் என்ற
அளவிற்கு அமைதியாக இருந்தது ........
என்ன அண்ணாச்சி என்ன ஆச்சு கடையில் யாரையுமே காணல
அது ஏம்ல கேட்குற இந்த 500,1000 ரூபாய் நோட்டு செல்லாதுன்னு சொன்னாங்கள்ள
நம்ம கடைக்கு வர்றவங்க எல்லாம் அந்த நோட்டையே கொண்டு வர்றாங்க
நான் என்ன கேனப்பையனா என்கிட்ட வந்து ஏமாத்திட்டு போவ ஒன்னு வந்தா சில்லரையோட
வாங்க இல்ல கொண்டு வர்ற மொத்த பணத்துக்கும் சாப்பாட்ட தின்னுட்டு போங்கன்னு ஸ்ட்ரிட்டா சொல்லிடேன்
இப்படி நம்ம வியாபாரிக வயித்ல பொழப்பை கெடுக்கராங்களே ஏன் இப்படி பண்ணுது இந்த அரசாங்களம்
சோகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் மாடசாமி .......
அட முட்டா பயலே இன்னைக்கு ஒரு நாள் வியாபாரத்தை பாக்குறியே இவங்களோட இந்த சட்டம் தேவைதாம்ல
வீட்டுக்குள்ள, மூட்டைக்குள்ளன்னு அரசாங்கத்துக்கு தெரியாம மறைச்சு வச்சிருக்கற கருப்பு பணத்தை இது மூலமா தான் வெளிய கொண்டு வர முடியும் , இனி இந்த பணம் செல்லாதுன்னு தெரிஞ்ச எவனும் அத உள்ள வச்சிருக்க மாட்டான் "கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தான ஆகணும் " அந்தக் கதை தான் இது , நேர்மையா வரி கட்டின எவனும் பணத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை மறைச்சு வச்சிருக்க பணம் வெளிய வந்து தான் ஆவணும் அதுக்கும் முறையா வரி கட்டி தான் ஆவணும் , " திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி பேசாம தான் இருக்கணும் " அதாம்ல சரி தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் ஹோட்டல் முதலாளி முருகேசன் .....

எழுதியவர் : க.நாகராணி (9-Nov-16, 4:40 pm)
சேர்த்தது : நாகராணி
Tanglish : panam ventaam
பார்வை : 711

மேலே