காதல் மோகினி

ஊஞ்சல் கட்டி
ஆடுகின்ற இலவம்பஞ்சே
உன் கடைக்கண் பார்வையில்
அறுந்து விழுகிறது
என் நாணக்கயிறுகள்,,,,,,!
உள்ளுக்குள் உறங்கும்
அசுரனை
எழுப்ப மனமில்லை
சூரசம்ஹாரம் ஞாபகத்தில் ,,,,,,!
வெளிவர துடிக்கும்
வார்த்தைகளும்
உன்னை சேரும் முன்
ஊமையாய் போவதை பாராயோ ,,,!
உந்தன் நிழலுக்கு தாலி கட்டி
வாழ்ந்து வருகிறேன்
பல ஜென்மங்களாக,,,,
என் நிஜங்கள் பொசுங்கி விட்டதால் ,,,,,,!