திருநெல்வேலிக்கே அல்வாயா

நம்ம திருநெல்வேலி காரப்பையன் ஒருத்தேன் ரயில்ல போயிட்ருந்தான்...

அப்போ சூப்பர் பிகர் ஒண்னு அவனுக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து ஒக்காந்தா..

நம்மபய புள்ளக்கு செம குஷியாயிடுச்சு..

அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால லைட்டா நம்மாளு அந்த சூப்பர் பொண்ண நோட்டம் விட ஆரம்பிச்சாரு...

அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவன பாக்க... இவன் அவளபாக்க...

இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க ( அந்த நிலாவத்த்..தா..ன்..ன்.ன்... ..) அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல போயிட்டாரு...

கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு பட்டுனு இவன் இருந்த சீட் பக்கம் வந்து ஒக்கார...

நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு ஏறி ஏஆர் ரஹ்மான் பேக்ரவுண்டு மியூசிக்குக்கு (உப்பு கருவாடு...) போயி தன்னமறந்து இருக்காரு....

அந்த பொண்ணு இவன உரசிட்டே....

மச்சான்... ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு....

இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு சங்கிலியை புடிச்சு இழுத்து ரயில நிப்பாட்டி எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிட்டா அந்த சூப்பர் பிகர்....

பையன் தான் திருநெல்வேலி காரனாச்சே... அசருவானா நம்ம பய..

அதுக்கு நம்ம திருநெல்வேலிகாரபய என்ன செய்தானு தெரியுமாலே...

பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து,
எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது...

நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில ...

நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு எழுதி காட்டினானாம்..

அந்த பொண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாளோ.... அதே மாதிரி அப்படியே எழுதி காட்டினாளாம்...

அத வாங்கி படிச்சிட்டு நம்மபய பொட்டிய தொறந்து உள்ள வச்ச பின்னாடி மெதுவா சொன்னான்...

எங்கே... சங்கிலிய புடிச்சி ரயில நிறுத்தி இப்போ கத்துடி பாக்கலாம்...!!!

ங்கொய்யால, யாருகிட்ட!
திருநெல்வேலிக்கே அல்வாயா.!!!

நீதி:
"PROOF OF DOCUMENTATION IS VERY VERY IMPORTANT

😂😂😂

எழுதியவர் : முகநூல் (11-Nov-16, 1:20 pm)
பார்வை : 239

சிறந்த நகைச்சுவைகள்

மேலே