என் வாழ்க்கை நீயே
![](https://eluthu.com/images/loading.gif)
காற்றில் ஆடும் கூந்தல்
உன் கூந்தல் உதிர்ந்த ஒற்றை முடி
ஒற்றை முடியின் வாசம்
வாசத்தில் வீசும் உன் நேசம்
நேசத்தில் வந்ததடி பாசம்
பாசத்தில் வீழ்ந்ததடி என் இதயம்
என் இதயத்தில் இருப்பதோ உன் நினைவுகள்
உன் நினைவுகளை நோக்கியே என் கனவுகள்
என் கனவுகளிலோ பலபல கற்பனை கவிதைகள்
கவிதைகளில் உன் அழகுகள்
அழகுகளில் தெரித்திடும் உன் சிரிப்புகள்
உன் சிரிப்பினில் மறந்திடும் என் கவலைகள்
என் கவலைக்கு நீயே மருந்துகள்
மருந்துகள் கொடுக்கும் விருந்துகள்
விருந்துகளே உன் பார்வைகள்
உன் பார்வைகள் எனக்கு சிறகுகள்
சிறகுகள் பறந்த வானங்கள்
வானத்தில் நீயே வானவில்கள்
வானவில்கள் என் வாழ்க்கையின் எண்ணங்கள்
எண்ணங்களில் எல்லாம்
உன்னை பற்றிய வண்ணங்கள்
வண்ணங்களே என் வாழ்க்கை
என் வாழ்க்கை என்றும் நீ யே....