என் இதயத்தில் ஊஞ்சல் ஆடும் சகியே 555
![](https://eluthu.com/images/loading.gif)
என் சகியே...
நொடிகள்கூட என்னில்
விலகாதவள் நீ...
என் இதயத்தில் ஊஞ்சல்
கட்டி ஆடும் சகியே...
உன் வாய்மொழி நான்
கேட்காமறந்தால் நடைப்பினமாவேன்...
உன்னைவிட்டு வினாடிகள்கூட
பிரியாமல் நான் வாழவேண்டும்...
உன் மலர் முகத்தில்
கண்களாகமாறி...
உன்னை பிரியாமல் நான்
இருக்க வேண்டும்...
கரங்களில் வளையலாக
என்னை அணிய நினைத்தால்...
உடைந்திடாத
பொன்வளையலாக வேண்டும்...
கழுத்தில் நான் சேர்ந்திருக்க
நீ நினைத்தால்...
உன் கழுத்தின்
நான் மச்சமாக வேண்டுமடி...
வாழ்வில் தோல்விகளை கண்டு
மனம் தளராதே...
அன்னையின் வயிற்றில்
பத்துமாதம் சுகமாக நீ...
உன் அன்னை எதிர்கொண்ட
யுத்தங்கள் எத்தனை நீ அறிவாயா...
பிறப்புக்கூட யுத்தம் என்றால்
மண்ணில் வாழ்வது எளிதல்ல...
அன்பினில் தீபம் ஏற்றி
பிறர் வாழ்வையும் மகிழ்வித்து...
என்றும் நீ வாழவேண்டுமடி
புத்தம் புது மலராய் பல்லாண்டுகள் நீ...
இனிய உதயநாள்
நல் வாழ்த்துக்கள்.....