காதல் கலவரம்

கருவிழிகளால்
காதல் கலவரம்
செய்தவளே!
என் இதயத்திற்குள்
கூடு கட்டி
காதல் பறவையாய் வந்தமர்ந்தாய்!.

நீ விழி திறந்த பின்பே
எனக்கான விடியலும்
விடிகிறது!.
நீ உறங்கும் வரை
என் பகலும்
தொடர்கிறது!.

உன் பாதம்படும்
இடமெல்லாம்
கவிதைகள் பூக்குதடி!.
காலனும்
காதல் கொண்டு
கவி ஒன்று படைத்தானட!.

புள்ளி வைத்து நீ கோலம் போட
என் மனவாசலில்
நீயே கோலமானாய்!
உன் நினைவுகளே
மனமெங்கும்
தோரணமாய் ஆனதடி!

மூன்றாம் பிறையோ?
முழு நிலவோ?
நீயே நாளும் புது நிலவு!
காற்றில்
காதலை கலந்து
உயிருக்குள் கலந்தாயடி!............

எழுதியவர் : தங்கமணிகண்டன் (13-Nov-16, 10:43 am)
Tanglish : kaadhal kalavaram
பார்வை : 84

மேலே