அவள் வருகை

நீ தொலைவினில் வரும்போது உனது
உடையின் நிறத்தை உணர்ந்தவுனே
நான் நடிக்கத் துவங்கிவிட்டேன்.
நின் நடிப்புச் சற்று தாமதமே.

நீ அருகினில் வரும்போது உனது
கொலுசுகள் பேசும் பேச்சினைக்
கேட்டவுடன் எழுத்தத் துவங்கிவிட்டேன்.
நின் கொலுசுகள் ஓர் பாமரமே.

நீ தோழிகளுடன் பேசும்போது உனது
விழிகள் குத்தும் வலிகளை
உணந்தவுடன் வீழத்துவங்கிவிட்டேன்.
நின் விழிகள் ஓர் வேல்மரமே.

நீ என்னைப் பார்க்கத் தவிர்க்கும்போது உனது
தத்தளிக்கும் தயக்கத்தை பார்த்தவுடன்
உன்னிடமிருந்து விலகிச்செல்லத் துவங்கிவிட்டேன்.
நின் தயக்கம் ஓர் இடர் தருமே.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (13-Nov-16, 11:56 am)
Tanglish : aval varukai
பார்வை : 157

மேலே