சுயம் தேடுகிறேன்

பிறந்தேன் அநாதையாய்
இழந்தேன் சிறுவயதில்
என் உறவுகளை சுனாமியில்..!

கல்வி கற்றேன் விடுதியில் இணைத்தேன் போராட்டத்தில் விரைந்தேன் நாட்டை காக்க...!

விதியோ மாற கண்ணீர் வடிகிறது
என் கண்களால்.....
வழியற்று தவிக்கின்றேன் இன்று தடுப்பு முகாமில் தனிப்பிறவியாய்....!

காயங்களும் சோகங்களும்
கலங்கச் செய்கின்றன என்னை..!

தீக்குச்சியின் தீபமாய் ஒளிர்ந்து சுடர்களை ஏற்றி விட்டு அணைந்து போகும் நிலையில் நானோ....!

புரியாத புதிராய் தொடர்கிறது என்னை வேதனைகள்.....
நானோ சுயம் தேடுகிறேன் தனிமையில்...!!!!!

எழுதியவர் : சி.பிருந்தா (14-Nov-16, 12:14 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : suyam thedukiren
பார்வை : 78

மேலே