சிறுவர் தினம் இன்று -பாப்பாக்கு ஒரு பாட்டு

நம் செந்தமிழ் நாட்டைப்பற்றி
கொஞ்சம் தெரிந்துகொள்ளு பாப்பா

நம் செந்தமிழ் நாடு பொன்னாடு
திராவிட நன் நாடு

முடி மன்னர் மூவர் ஆண்ட நம் நாடு
தொன்மையான தமிழ் நாடு

நமக்கென்று ஓர் இனிய மொழி உண்டு
அதுவே திராவிட தென் மொழி
தொன் மொழி தமிழ் மொழி

நம்மொழிக்கு நல்ல இலக்கணமுண்டு
நல்ல இலக்கியங்கள் பல உண்டு

சங்கத் தமிழ் என்றே தமிழுக்கு பெயருண்டு
ஆம் சங்கப புலவர்கள் வளர்த்த தமிழ்

நமக்கென்று இனிய மொழி ஒன்று இருக்கையில்
அதை இனிதே பேசிடுவோம் படித்திடுவோம் காத்திடுவோம்

எந்தன் அருமை சிறுவர்களே தமிழ் சிறுவர்களே
தப்பாமல் பள்ளிக்கு செல்லவேண்டும்

பாடங்கள் எல்லாம் படித்திடவேண்டும்
நல்ல மாணாக்கனாய் வளர்ந்திடவேண்டும்

நல்லொழுக்கம் நாடிடவேண்டும் அதை
தப்பாமல் வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டும்

நல்லதோர் தமிழ் மகனாய் வாழ்ந்திடல் வேண்டும்
நாடே போற்றும் தலைவனாய் வந்திட வேண்டும்

இன்று நாடெங்கும் நம் நாடெங்கும்
சிறுவர் தினம்

என் இனிய தமிழ் சிறுவர்களே இன்று
அறிந்திடு நம் நாடு விரிந்த பெரு நாடு
நாம் எல்லாம் இந்தியர் நம் நாடு இந்தியா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Nov-16, 4:07 am)
பார்வை : 74

மேலே