தனலக்ஷ்மி

தனலட்சுமி !
நீதான் எந்தன் குணம் - அதனால்
நிறைந்ததோ எனக்கு பணம் - அன்பில்
குறைந்ததே எந்தன் சினம்

நீ என்னுள் வந்ததனால்
நீங்காத சந்தோசம் - எனக்கு
நீங்கியதே சனி தோஷம்

நானும் காத்திருந்தேன்
ஞானம் வருமென்று நாட்கள் தான் ஓடியது
தான(ர)மாய் நீ வந்தாய்
ஞானமோ பெருகியது நதி போல

காணும் கண்ணிற்கு கவிதையாய் நீ வந்தாய்
காணா மண்ணிற்கும் கருவூலமாய் நீ வந்தாய் - இதை
நானாக சொல்லவில்லை ஞாலம் சொல்லியது
தூணாக இருக்கின்றாய் நாட்டிற்கு - நல்ல
துணைவியாய் இருக்கின்றாய் வீட்டிற்கு !

வீணான சொல் இல்லை வீரத் திருமகளே - உன்
விரல்கள் பட்டாலே வியந்திடுமே உலகமெல்லாம்
பரலோகம் முதலே பாதாளம் வரையே
பரந்திருக்கும் உன் ஆட்சி!
மறந்திருக்க முடியுமோ உன்னை !

கருத்துக்கள் சொல்லலாம் ! உன்னில் உண்மையாய்
கலந்திருந்தால் , வெல்லலாம் உலகை !
கலமாய் நீ இருந்தால் காசு நிறைய வரும் - அணி
கலனே நீ மறைந்தால் பெரும் மாசு வரும் !

மொத்தத்தில்
நீ எந்தன் தனலட்சுமி மட்டுமல்ல
தானலட்சுமி ! காணலட்சுமி! ஞானலட்சுமி !
எல்லாமே நீ என்றால் எல்லோர்க்கும் நீதானே
இன்ன்ன்பலக்ஷ்மி !!!!!!!!

எழுதியவர் : மரியா (14-Nov-16, 7:50 pm)
பார்வை : 67

மேலே