கூகுள் நிறுவனம் இந்திய சிறுமி வரைந்த படத்தை முகப்பு பக்கத்தில் வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது
புது டெல்லி, நவ.14: குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி கூகுள் நிறுவனம் இந்திய சிறுமி வரைந்த படத்தை முகப்பு பக்கத்தில் வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது.
.
அதற்காக, தனது முகப்பு பக்கத்தில வைக்கும் டூடுள் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எண்ணி ஒரு போட்டியை ஏற்பாடு செய் திருந்தது. தேசிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியின் கரு நான் எவருக்கேனும் ஏதாவது கற்றுத்தர நினைத்தால், அது.. இந்த கருவுக்கு ஏற்றார் போல் யார் டூடுள் வரைகிறார்களோ, அவர்களின் டூடுளை கூகுள் நிறுவனம், குழந்தைகள் தினத்தன்று முகப்பு பக்கத்தில் வைக்கும் என கூறி இருந்தது. இந்த போட்டியில், புனேவை சேர்ந்த 11 வயதுடைய அன்விதா பிரசாந்த் தெலாங் என்ற சிறுமி வரைந்த இப்போது வாழ்வது என்ற ஓவியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவரின் ஓவியம், இன்று கூகுளின் டூடுளாக இருந்தது. இது பற்றி அன்விதா, என் ஓவியத்தில் நான் காண்பிக்க நினைத்தது நிகழ்காலத்தில் வாழ்வது பற்றி தான். நான் எதைப் பற்றியும் அதிகம் கவலை கொள்ளாமல் நிகழ்காலத்தில் வாழவே முயல்வேன். அது தான் என்னை மகிழ்வுடன் வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.