காதல் இனியவள்

நான் எழுதிவைத்த
கவிதைத்தாளில் ஈ மொய்த்தது
அதில் இனிப்பை மூடி வைக்கவில்லை
என் இனியவளைப் பாடி வைத்திருந்தேன்
அவள் தேநீர் குடித்துவிட்டு
மீதம் வைத்த கோப்பையில்
தேன் மிதந்தது
அணில் கடித்த பழத்தைவிட
அவள் கடித்துக்கொடுத்த பழம்
இனிக்கின்றது ..
அவள் கலந்துகொள்ளாத
அழகிப்போட்டி இனிப்பு
கலக்காத தேநீர்
அவள் தேநீர்
போடும்போது மட்டும்
நீர் தேனாய் இனிக்கிறது..
சேலைப்பெண் கைபட்ட
சேலத்து இரும்பு கூட
சர்க்கரையாகின்றது உருக்கும்போது
இந்த இனியவள்
என் காதலி இனி அவள்