என்னை கொல்கின்றது

காற்றுக்காக மட்டுமா
ஜன்னலை
திறந்து வைத்தேன்?
உன் நினைவையும்
விரட்ட அல்லவா?
காற்றோ உள்ளேயும்,
வெளியேயும் சுதந்திரமாக
உன் நினைவு மட்டும்
வெளியேறாமல்.
ஜன்னலில் தொங்கும்
திரைசீலைப் போல
விலகி விலகி வந்து
ஒட்டிக்கொள்கின்றது
எனை கொல்கின்றது.
#sof_Sekar