சிவன் திருப்புகழ்

செஞ்சடை மீது கங்கையி னோடு
****திங்களு லாவு சிவநாதா!
செந்தமி ழோடு மந்திர மோது
****திண்டிற லோடு மொழிவேனோ!
நஞ்சர வாட மன்பதை யாட
****நந்தியு மாட மகிழ்வோனே!
நம்பிடு வோரி னன்புள மேகி
****நன்னிலை யோடு வருவாயே !
வஞ்சனி யோடு சங்கர ராதா
****மன்றினி லாசி அருள்வோனே !
வங்கண மோடு சுந்தர ரோடு
****வந்திட லீலை புரிவோனே!
அஞ்சித மோடு கும்பிடு வோரை
****அம்பிகை நாத னணைவோனே!
அம்பல வாண னின்துதி பாடு
****மன்பரை வாட விடுவானோ ?

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Nov-16, 1:14 am)
பார்வை : 304

மேலே