கண்ணீரின் சொற்கள்

எட்டணாக்கு அலஞ்சவளே
எட்டுவச்சு போறீயடி!
எட்டிஎட்டி வந்தவன
ஏச்சுப்புட்டு போறீயடி!

உச்சிவெயில் நேரத்துல
ஒன்னபாக்க வந்தனடி!
உச்சுக்கொட்டி நிக்கிறியே
உசிருகொஞ்சோ குறையுதடி!

ஆத்தங்கர ஓரத்துல
அடகாத்து நின்னனடி!
ஒஞ்சேலைக்கு வெயில்தடுக்க
குடபுடிச்சு நின்னனடி!

செஞ்சுவச்ச தவமெல்லா
செத்துகித்து போயிருச்சே!
செம்பருத்தி கோவப்பட
செம்மண்ணு அழுதிருச்சே!

தலமாட்டில் நானிருக்கு
நினப்பெல்லா சொன்னவளே
தலகாணி கரையுதடி
நிசத்தானா கருக்குயிலே?

சேதிஒன்னு வருதேனு
ஓடிநா பாத்தேனே!
ஒலஒன்னு வந்திருக்க
பின்னதா தெரிஞ்சேனே!

பச்சநிற வரப்பெல்லா
கேட்டுக்கிட்டே அழுதிருச்சே!
பச்சநிறோ வெளுத்துபோய்
செவப்புநிறோ தெரிஞ்சுருச்சே!

முந்தான முடிச்சுக்கிட்டு
மூட்டதூக்கி வைச்சவளே!
மூவூறு தாண்டிபோய்
வாக்கப்பட போறவளே!

மஞ்சதாலி வேண்டானு
தங்கதாலி கேட்டவளே!
தங்காலி கட்டிபுட்ட
மஞ்சதாலி கரஞ்சுருச்சே!

வளகாப்பு வருமுன்ன
ஊருபக்கோ வாயேண்டி?
ஊருபக்கோ வந்துபுட்டா
வீட்டுபக்கோ வாயேண்டி?

எழுதியவர் : (18-Nov-16, 10:19 am)
பார்வை : 125

மேலே