என் ஆசைகள்

காலக் கருவி ஏறி
கடந்த காலம் சென்று
தொலைத்த பால்யங்களை
மீட்டுக் கொண்டு வர ,

ஆத்தில தெரியும்
வானத்து மேகங்களை
தூண்டில் போட்டு
பிடிச்சி கொண்டாந்து
வீட்டில அடைக்க ,

அடைச்சு வைச்ச
மேகங்கள் மேல
ஏறி குதிக்க,

ஒரு நிமிசமாது
ஓரமா நின்னு
வைரமுத்து சார
பார்க்க ,

பரந்துபட்ட
கவிதை உலகில்
இறந்து பட்ட
புல்லாகவேனினும்
கிடக்க,

எங்க ஊர்
உப்பளத்தில் ,
உசிர் உறிஞ்சும்
வெயிலில்
ஒரு நாளாச்சும்
உப்பு மிதிக்க ,

வானம் பார்த்த
பூமியில் ,
ஒருவருசமேனும்
விவசாயியா
வாழ்ந்தோ , செத்தோ
பார்க்க ,

எனக்கு ஆசை !

எழுதியவர் : அனுசுயா (18-Nov-16, 10:59 pm)
Tanglish : en aasaikal
பார்வை : 184

மேலே