காதல் குயிலு ஒண்ணு சும்மா சும்மா பாடுது.!

காதல் குயிலு ஒண்ணு
சும்மா சும்மா பாடுது.!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
காதலர் இருவரும்
வலி தீர
கண்ணொளி மழுவி
தழுவினாரே
சோலையில் சந்திக்க
நாள் பார்த்து
ஓதி வைத்தார்
ஓர பார்வையிலே !
பயந்து வந்த பெண் புறா
பார் வேந்தன் சிபி
மடியினிலே
பதுங்கி தெளிந்தது போலே
பாவை சொக்கன்
கையினிலே
பசலை நீங்கி தெளிந்தாளே!
பார்த்தன் கை வில் எனவே
வளைந்த சொக்கன்
கையினிலே
பறந்து வந்த அலுப்பு தீர
படர்ந்தாள் பாவை.பாசத்
தழுவலிலே!
ஊடலில் உழன்று
கழன்றவராய்
உவகை முறுவல்
கிளைத்தவராய்
வாய்த்த வரம் பலிக்க
பெற்றவராய்
வாடா மலரெனவே சிரித்து-மகிழ்ந்தனரே!
முத்து நகை பூண்
அன்னக்கிளி
முகிழ் மலர் வாய்
கனி பவளத்திலே
முனிவன் சொக்கன்
முத்து பதிக்க
முத்து திர்ந்தது
கயல்கள். இரண்டிலுமே!
கோடையில் வந்த
மழையில் நனைந்ததோ
குடத்தில் நிறைந்த
தேனில் வீழ்ந்ததோ
கொடை அமிர்தம் நிறை பாற்கடலில் திளைத்ததோ
சோலைக்குள்ளே குயிலு ஒண்ணு
சும்மா சும்மா பாடுது.!