காயங்களுடன் வலிகள்
காயங்கள் ஏற்பட்டது
என் காதலியின் கைகளில்,
காலங்கள் மறந்து துடித்தேன்
அவள் பட்ட காயங்களின் வலிகளை விட
அதிகமான வலிகளை
நான் சுமக்க வேண்டுமென்று....
எனக்காக
உன் வாழ்க்கையை அர்ப்பணித்தாய்,
உனக்காக
என் உயிரையும் அர்ப்பணிிக்க
தயார் என்பதையும்
நீ புரிந்து கொள் உயிரே...
உன்னைத் தீண்டிய
காயங்கள் ஆறினாலும்,
உன்னைத் தீண்டிய காயங்களால் எனக்கு ஏற்பட்ட வலிகள்
என் விழிகள் இழந்து போனாலும்
வலிகளை நினைத்து சிந்துவேன்
உனக்காக என்
கண்ணீர்த் துளிகளை
உன் முகம் மலராதிருக்க
புன்னகைத் துளிகளாய்
கண்ணீர் துளிகளை வலிகளுடன்..
என்னுயிர் உள்ளவரை
என்னுயிரை தந்து
உன்னை காப்பேன்,
உன் அன்னை வடிவில்
உயிரின் உயிரே.........!!!
பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை