கண்களிலே காதல்கனவுலகம் சுழலுதடா

கண்களிலே காதல்
கனவுலகம் சுழலுதடா!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
மஞ்சள் வெயில் பார்த்து
மலர் சோலை சார்ந்து
அன்னக்கிளி
அன்ன நடை மறந்து
அஞ்சும் நடை நடந்தாள்!
எண்ண கிளி
அவள் மனம் துறந்து
அவசரமாய் முன்னே பறந்தததடா!
கன்னத்திலே கனி திரட்சியடா
கன்னி அவள்
கண்களிலோ மானின் மிரட்சியடா!
உதட்டோரத்திலே
ஊறும் பழ சாரத்திலே
உள்ளத்தின் உன்மத்தம் தெரியுதடா!
தூரத்திலே
நதி தீரத்திலே
ஊரகம் தள்ளி அமைந்ததொரு
ஊருணி அடுத்த மலர் சோலையிலே!
சொர்ண கிளி வரவை
பார்த்திருந்தான்
சொக்கன் கிலியுடனே அங்கே
காத்திருந்தான்!
பாவை வரவை சுட்டும்
பாதை பார்வையிலே நீளுதடா
பதை பதைத்து உதைக்கும்
பாழும் மனமோ துள்ளுதடா!
பஞ்ச வர்ண கிளி பக்கம்
நெருங்கிவிட்டாள்
பதைப்பில் இருந்த சொக்கனும்
பார்த்துவிட்டான்!
கொஞ்சும் விழி பார்வையிலே
கெஞ்சும் கைகளை
நீட்டுகின்றான்
தஞ்சம் என்றே தையல்
தரையில் கால் படாது
ஓடுகின்றாள்!
கன்னி அவள் கண்களிலே
கனவுலகம் சுழலுதடா
நிச உலகம். மறைந்ததடா !