அழியும் நம் விவசாயம் 555
விவசாயம்...
வானுயர்ந்த கோபுரம் கட்டி ஆயிரக்கணக்கான
சிற்பங்கள் செதுக்கினான் சிற்பி...
சிற்பங்கள் இல்லையேல்
கோபுரம் இல்லை...
களத்தில் யானை வைத்து நெற்கதிர்
அடித்தானாம் என் பூட்டன்...
விவசாயம் இல்லையேல்
பூமிக்கு அழகில்லை...
தொழில் நுட்பங்கள் வளர்ந்தாலும் அன்றைய
சிற்பங்களின் சிறப்பு இன்று இல்லை...
நிலம் உழுக டிராக்டர் வந்தாலும்.
களை எடுக்க இயந்திரம் வந்தாலும்...
அன்றய நெற்கதிர் இன்று
வயலில் இல்லை...
மதுபான தயாரிப்புக்கு கொடுத்த
பலகோடிகள் தள்ளுபடி...
அவன் வாழ்கிறான்
மாடிவீட்டில்...
உணவு தயாரிக்க சில ஆயிரங்கள்
தள்ளுபடி இல்லையாம்...
மனம் வருந்தி மாலையாக
சூடிக்கொண்டான்...
முழம் கயிற்றை
கழுத்தில்...
கடனுக்காக நிலத்தை விற்றான்
பல ஆயிரங்கள் விலைபோயின...
நெற்கதிரை விற்க வந்தான் அவன்
சுமைகூலிகூட விலை இல்லை...
சிற்பங்கள் சிதைகின்றதாம்
சிற்பகலையும் அழிகிறதாம்...
விவசாயமும் அழிகிறது
வறுமையில் விவசாயி அழிக்கிறான்...
வயலோரவேலி கள்ளிச்செடியும்
காய்ந்துபோகிறது...
தானியங்களை உரிமையோடு கொத்தி
தின்ற பறவைகளும் பசியில் இறக்கின்றன...
அழியும் விவசாயம்
இனியேனும் காக்கப்படுமா.....