நட்பு

கண் காக்கும் இமை நீ..
கரம் கொண்ட விரல் நீ..
வேர் தாங்கும் நிலம் நீ..

என் வெறுமையில் இனிமை நீ..
இனிமையில் இனிப்பு நீ.
காதல் கவி களின் சாரம் நீ.
கத்தி முனை கொண்ட வீரம் நீ..

நீ என்ற சொல்லின் வடிவம் நீ வாய் வழி வரும் வார்த்தை நான் ...

நாம் என்ற சொல்லின் நாதம் நட்பு எனில் ..

நட்பு என்னும் சொல்லின் கீதம் நாம்...

எனக்கு நான் வாழ்த்து கூற முடியாது அதனாலே இதுவரை நீ என விழைத்தேன் ...

எனது அத்தனை நட்புகளுக்கும்
இனிய நட்பியல் தின வாழ்த்துகள் .....

எழுதியவர் : பாலா (21-Nov-16, 8:34 pm)
Tanglish : natpu
பார்வை : 64

மேலே