காதல் சொல்ல

என்னுள் சலனம்
உந்தன் மௌனம்

வீணையென எந்தன்
நரம்பு மீட்டுகிறாய்

சதிராடிய கண்களும்
சாதுரிய மொழிகளும்
நினைவோடு மோதும்
கவிதையென மாறும்

நீ வரும் வழிதனில்
மழை என
கவிதை தூவும்
நீ ஒதுங்கி நின்றாலும்
சாரல்என உன்னை
மெல்ல தீண்டும் உன்
காதல் சொல்ல தூண்டும்

எழுதியவர் : ஜெகன் ரா தி (21-Nov-16, 8:45 pm)
Tanglish : kaadhal solla
பார்வை : 82

மேலே