தண்ணி எடுக்கப் போறவளே

ஆத்து மேட்டுல அத்தமகப் போறாளே...
சேத்தில் மொளச்சத் தாமரையாப் போறாளே...
கண்ணால வலவீசி கன்னியிவப் புடிச்சாளே...
தண்ணிக் கொடத்துக்குள்ளே என்னத்தான் அடச்சாளே...
அன்ன நடயா அலுங்காமப் போறாளே...
சின்ன சிரிப்பால் கொன்னுதான் போறாளே......


கொத்தமல்லி கொடியிடையில் கொடமொன்னு இருக்குது...
கொண்டுவரும் தண்ணியும் கொடத்துக்குள்ளே குதிக்குது...
கொலுசும் வளயலும் மெல்லமாய்ப் பேசுதே...
கள்வன் இவனென்று இரகசியமாய்ச் சொல்லுதே...
கொஞ்சங்கூட நிக்காம கால்களும் செல்லுதே...
மெட்டுக் கட்டி நானுந்தான் பாடுறேன்...
கட்டவுந்தக் கன்னுக் குட்டியாய் ஓடுறேன்......


கருவேல முள்ளுக் குத்தி நின்னாளே...
காலத் தொட்டு முள்ள எடுத்தேனே...
கையால கன்னத்துல முத்தம் கொடுத்தாளே...
ஒன்னோட ஒதட்டாலே கொடுத்தா சொகமென்றேனே...
வெட்கத்துல அவளும் முகம் செவந்தாளே...
செத்துப் பொழச்சு மீண்டும் வந்தேனே...
சொர்க்கம் ஒன்றை மண்ணில் கண்டேனே......

எழுதியவர் : இதயம் விஜய் (22-Nov-16, 9:29 am)
பார்வை : 90

மேலே