மழலையாக மாறிவிடு மானிடா
அன்புதான்
அனைத்திற்கும் அடிப்படை..
மதமானாலும் சரி
மனிதமானாலும் சரி
ம்ம் அறிந்ததுதான் ...
பண்பும் பாசமும்
மனிதனுக்கே உரிய
பிறவிக்குணங்கள்
விருந்தோம்பலும்
விட்டுக்கொடுத்தலும்
நம் கலாச்சாரத்தின்
சிறப்பம்சங்கள்
ம்ம் தெரிந்ததுதான்...
இப்படியிருக்க
எங்கிருந்து கற்று கொண்டாய்
கோபத்தை
வன்மத்தை
பகையுணர்வை
பழிவாங்கும் எண்ணத்தை ?
உன் மழலை புன்னகைக்காக
உலகமே தவிமிருக்க
உன் உடன்பிறப்புகள் மீது
கோபக்கனலை பொழிவதும்
உன் நஞ்சு பார்வையால்
நட்பு வட்டாரத்தை
நசுக்குவதும் முறையா?
மழலையாக மாறிவிடு மானிடா
உன் மட்கிப்போன உணர்வுகளெல்லாம்
மறுரூபம் பெற்றுவிடும்
நீ மழலையாக மாறிவிட்டால்
மழலையாக மாறிவிடு மானிடா ....