கனவு உலகம்

கண்னை மூடி என்னுடன் ஒரு நிமிடம் பயணியுங்கள் !!!! அது ஓரு அழகிய ரம்மியமான காடு குயில் கூவும், அங்கங்கே மரச்சலசலப்பு இசையாக கேட்கும்
உணவுக்கென்று நீங்கள் எந்த பீட்சா பர்கரையும் அங்கே எதிர்பார்க்க கூடாது ,,, செடியில் பரித்த கேரட், கொய்யா, திராட்சை பழங்கள் போதும் என்ற அளவிற்கு கொட்டிக்கிடக்கும்,,,,
காலையில் எழுந்ததும் கோல்கேட் பேஸ்ட் தேடினால் அடி தான் விழும் மெதுவாக நடந்து சென்றால் எழில் கொஞ்சும் வேப்பமரம் வேப்பங்குச்சி ஆயிரம் பல்பொடி விளம்பரங்களுக்கு சமம்,, குளிக்க சவர் பாத்ரூம் சோப்பு , சேம்பூ கிடையாது ஆத்தோரம் கலிமண் நிறைந்து கிடக்கும் நிறைவாக ஆற்றில் குளித்து விட்டு வாருங்கள் இயற்கை உணவை உண்டு விட்டு உண்ட மயக்கத்தில் செய்தித்தாலையோ, சன் மீயூசிக்கையோ தேடாதீர்கள் வெளியே பறக்கும் காக்கையும் , குருவியும் உங்கள் டைம்பாஸ்,,,,
மீண்டும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உறங்கலாம் மாலை எழுந்ததும் காப்பி கேட்காதீர்கள் கீரை சாறு இருக்கிறது உடம்பிற்கு நல்லது குடித்துவிட்டு வாக்கிங் கூட போய் வரலாம் இரவு டின்னர் எதிர் பார்த்து விடாதீர்கள் அனைத்து பழங்களையும் இரண்டு டம்ளர் பழரசம் உள்ளது மனதார பருகலாம்,,,,,
இரவு உங்கள் வாட்ஸ்அப்,பேஸ்புக் நண்பர்களிடம் கடலை போடலாம் என கனவிலும் நினைத்து விடாதீர்கள் செல்போன் முற்றிலும் காணாத பகுதி அது !!!
நிலவு பார்த்தே கதை கதையாக பேசலாம் கவிதையும் பேசலாம் சொர்க பூமி அது....
"அடியேய் இன்னுமா தூங்குறா அலறல் சத்தம் கேட்டு எழுந்தேன் தலை மேட்டில் அம்மா நீண்ட நேரமாக எழுப்பி கோவகாரி ஆகிவிட்டார் போல, அவ்வ்வ் அப்போ அத்தனையும் கனவா????