சோனம் அடியே சாணம்
ஏம்ப்பா எனக்கு சோனம் -ன்னு பேரு வச்சீங்க?
@@@
ஏம்மா ஏன்? என்ன ஆச்சு? சோனம்-ங்கறது அழகான இந்திப் பேரும்மா.
@@@@
இல்லப்பா எம் வகுப்பில இருக்கற எல்லாப் பொண்ணுங்களுக்கும் இந்திப் பேருங்களத்தான் வச்சிருக்காங்க - லதா (கொடி) , ஹேமா (தங்கம்), கனகா (தங்கம்), ஸ்வர்ணா (தங்கம்) ஸ்வேதா (வெள்ளச்சி), ஷியாமளா (கருப்பாயி), பிருந்தா (துளசி) -ன்னெல்லாம் இந்திப் பேருங்கப்பா. ஆனா என்னோட இந்திப் பேர மட்டும் அவுளங்க " சோனம், அடியே சாணம்? எந்த மாடு போட்ட சாணம்டி -ன்னு கிண்டல் பண்ணறாங்கப்பா.
@@@@
நா மறுபடியும் சொல்லறேங் கேட்டுக்க. சோனம் அழகான இந்திதிப் பேரும்மா. அந்தப் பேருக்கு ' அழகான" (beautiful) ன்னு அர்த்தம்டாச் செல்லம்.
@@@@
ஏம்ப்பா நா அழகாத்தானே இருக்கறேன்?
@@!@
@@@@@
ஆமா. அதிலென்ன சந்தேகம். உலக அழகின்னு சொல்லறாங்களே அந்த ஐஸ்வர்யா ராயைவிட நீ அழகாத்தாம்மா இருக்குற.
@@@@
அப்ப எனக்கு 'அழகி' -ன்னு பேரு வச்சிருக்கலாமே?
@@@@
உனக்கு 'அழகி' -ன்னுதாம்மா பேரு வச்சோம். செய்தித் தாள்ல அடிக்கடி " அழகி கைது", "அழகிகள் கைது" -ங்கற தலைப்பில செய்திங்கள வெளியிடறாங்க.
@@@@
ஏம்ப்பா அழகா இருந்தா கைது பண்ணுவாங்களா?
@@@@@
இல்லம்மா ஒழுக்கம் தவறி நடக்கற பொண்ணுங்களத்தான் அழகிகள்-ன்னு சில செய்தித்தாள்கல போடுவாங்க. அதனாலதான் அழகி -ங்கற பேர மாத்தி "சோனம்"-ன்னு பேரு வச்சோம்.
@@@@
போங்கப்பா, எனக்கு சோனமும் வேண்டாம் சாணமும் வேண்டாம். எனக்கு வேற நல்ல பேரா மாத்தி வைங்கப்பா.
@@@@
கொஞ்சம் பொறுத்துக்கம்மா. உங்க அம்மாகிட்ட பேசிட்டு உனக்கு நல்ல பேரா வச்சிருலாம்.
@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@