பதறவச்சுட்டா பொண்டாட்டி
மனைவி : ஹலோ... நீங்க பிஸியா?
கணவன் : இல்லடா செல்லம்..! சொல்லு...
(மனசுக்குள்ளே :சனியனே.. வேலசெய்ய விடாதே.. சீக்கிரம் சொல்லிதொலை..)
மனைவி : ஏங்க.. இன்னைக்கு தேதி என்ன சொல்லுங்க?
கணவன் : இன்னைக்கு தேதி 24. என்னடா தங்கம்.?
மனைவி : ஒண்ணும் இல்ல.. போனை வைங்க..!
கணவன் : (பதற்றம் அடைந்தவனாக) அய்யய்யோ தேதி கேட்டு வைச்சிட்டாளே.. இந்த தேதில ஏதாவது சொல்லி தொலைச்சோமோ.? என்ன ஆவபோவுதோ தெரியலயே..!!??!!
Eb பில் கட்டியாச்சு, போன் பில் கட்டியாச்சு,
பால் பணமும் கொடுத்தாச்சு,
மளிகை கடைக்கும் பணம் கொடுத்தாச்சு,
கேபிள் பணமும் கொடுத்தாச்சு....!!!
தன் அம்மாவுக்கு போன் பண்றான்..
அம்மா எங்க கல்யாண நாள் எப்போ??
அடுத்த மாசம் டா. ஏன் ??
ஒண்ணும் இல்ல. வை..
மாமியாருக்கு போன் பண்றான்..
அத்தை.. மாலாவுக்கு பிறந்தநாள் எப்போ??
12வது மாசம்தான் மாப்ளே. ஏன்.????
சும்மாதான் கேட்டேன், அத்தே நான் அப்புறம் பேசுறேன்..
தன் மகனுக்கு போன் பண்றான்..
அம்மா ஏதும் பாத்திரத்த போட்டு ஒடைச்சாளாடா..??
இல்லப்பா..
கோபமா இருக்காளா??
இல்லப்பா..
இப்போ என்ன பண்றாள்..?
டீவீல சீரீயல் பாக்குறாங்கப்பா.
சரி வை...
மனைவிக்கு போன் பண்றான்..
டார்லிங்... ஏன்டா தேதி கேட்ட??
ஒண்ணும் இல்லங்க காலண்டர்ல ரெண்டு நாளா தேதி கிழிக்கல அதான் கேட்டேன்..
சரிடா வைச்சிட்றேன்...
அப்பாடா... பயபுள்ள கொஞ்ச நேரத்ல பதற வெச்சிட்டாளே ...😜😜😜😜😜😜😜