அரசாங்கம் முடிவெடுத்துருக்கு
ரெண்டு அரசு அதிகாரிங்க எதோ பேசிட்ருந்தாங்களாம்,
அப்போ அங்க வந்த ஒரு பத்திரிக்கையாளர் எதப்பத்தி சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்ருக்கிங்கனு கேட்டாப்லயாம்,
அதுக்கு அவங்க,
ஆயிரம் விவசாயிகளையும் லக்ஷ்மி மேனனையும் கொல்ல போறதா அரசாங்கம் முடிவெடுத்துருக்குனு சொன்னாங்களாம்.
அதகேட்ட பத்திரிக்கையாளர் லக்ஷ்மி மேனன்ன எதுக்கு கொல்லணும்னு கேட்டாப்லயாம்...
அப்போ அந்த ரெண்டு அதிகாரிகள்ல ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட சொன்னாப்லயாம்,
சொன்னேன்ல அந்த ஆயிரம் "விவசாயிங்க சாகறதபத்தி இவனுங்க யாரும் கண்டுக்க மாட்டாங்கனு".!