நகைச்சுவை --------மனைவி-கணவன் பேச்சு மகளிர் பாதுகாப்பு தினம் முன்னிட்டு -சிரிக்க, சிந்திக்க
கணவன் - மனைவி ஒரு ஞாயிற்று கிழமை
காலை வீட்டில் பேச்சு .
மனைவி : என்னையா, ஒன்னத்தான், இன்னிக்கு
ஞாயிற்று கிழமை தெரியுமில்ல , வீட்டு வேல
ஏராளமா இருக்கு ,பசங்களுக்கு நாளைக்கு
பரீக்ஷ ஆரம்பம் , கொஞ்சம் வீட்டுல
விழுந்து கடா, நீ சும்மா இருந்தாலே போறும் ஐயா
எனக்கு ஒத்தாசையா இருக்கும் ......................
இன்னிக்கும் அந்த பாழா போன டாஸ்மாக் போய்
குந்திக்காதயா......... ப்ளீஸ் யா ..............
கணவன் : அடி போடி போக்கத்தவளே ............இன்னிக்கு..
இந்த ஞாயிற்று கிழமை எப்போ வருமுன்னு தான்
காத்திருக்கேன் ...........என் சகாக்கள் அத்தனையும்
டாஸ்மாக் ல திரண்டு வரும்......... ஒரே குடி, கூத்து..
கொண்டாட்டம்..... அந்த கிக்க்கு ...... தனியே.....
மனைவி : அதன் அந்த இலவ குடிக்க தினமும் சாயந்திரம்
வேல லெந்து திரும்பின உடனே , ஏதோ கோவிலுக்கு
போறா மாதிரி போய் டாஸ்மாக் போய் ஒக்கறாரே
இந்த ஞாயிற்று கிழமைகள் அச்சும் வீட்டுல குடிக்காம
இரேன் யா ............
கணவன் : அடி போடி, அதெல்லாம் நடக்காது........போய் வேல கவனி
எனக்கு நாஸ்தா வெச்சிட்டு போ........குளிச்சிட்டு போகணும் !!!!
ரொம்ப ராங்கி பண்ண தெரியுமில்ல , மூஞ்சுல மூணு குத்து விழும்
....................(கோபமா)
மனைவி : ஐயா புரிஞ்சுக்கோ, இன்னிக்கு , மகளிர் பாதுகாப்பு தினம்
உலகம் முழுக்க கொண்டாடறாங்க ...........அநியாயம் எதிர்த்து
பெண்கள் தெருத்தெருவா போராடறாங்க ............ஆங்கில போல
ஆளுங்களுக்கு நெருக்கடி வருது, ஜாக்கிரதை.... வாய்யா ரொம்ப
உடாதே.............
(வெளியில ஒரே இரைச்சல் , என்னென்னு பாக்கறான் கணவன்
அங்கே நூறுக்கு மேற்பட்ட பெண்கள் கையில் அட்டை தாங்கி
குடி ஒழிக .,குடிக்காதே, குடிக்காதே ,குடியை கெடுக்காதே ,
மனைவியை வதைக்காதே , டாஸ்மாக் மூடு.... என்று கூவுதல்)
கணவன் : அடிப்பாவி இப்படியும் ஒரு புரட்சியா ...............போ...........போ
வந்து பாத்துக்குறேன்
(வீட்டுலே இருப்பு கொள்ளாமல் துண்டு மறக்க மூஞ்சோடு
வெளியில் ஓடறான்)
மனைவி : என்று தணிந்திடுமோ இந்த குடி தாகம் ஆம்பளைங்களுக்கு
என்று மூடுவாங்களோ இந்த டாஸ்மாக் ய்......................
திருந்தா ஜென்மங்கள் .................இறைவா வலி சொல்வாய்.....!