ஒரு நாள் ஒரு கனவு

கார்த்தி,சிவா,ஜெகன் மூவரும் உயரை கொடுக்கும் அளவிற்கு உயிர் நண்பர்கள்...
ஒரு நாள் கார்த்தி தன் நண்பர்களுக்கு போன் செய்து ட்ரீட் தருவதாக கூறி இருவரையும் இரவு பத்து மணிக்கு அழைத்தான்.....
ட்ரீட் னு சொன்ன போதுமே ஏன் எதுக்குனு கூட கேட்காம பத்தாயிரம் கிலோமீட்டர் இருந்தாலும் கூட பறந்து வருவதுதானே நட்பின் குணம்..இவர்கள் இருவரும் ஏன் எதற்கு கேட்காமலே செல்கிறார்கள்....

மூவரும் பத்து மணிக்கு மேல் ஒயின்ஷாப்பில் கூத்தும் கும்மாளமும் அடிக்கின்றனர்....அப்போது கார்த்தியின் காதலி போன் செய்கிறார்...அவருக்கு காதலி இருப்பதையும்,இப்பொழுது அவளுடன் ஒரு பிரச்சினையில் இருப்பதையும் மறைத்து கம்பெனி கால் என்று நண்பர்களிடம் பொய் கூறி கட் செய்து விடுகிறார் கார்த்திக்....கார்த்திக்கு போன் வருவதை கண்டு ஜெகன் கமெண்ட்அடிக்கிறார்.....
மச்சி... ஒரே பொண்ண பார்த்த உன் லைப் காலி.... ஒவ்வொரு பொண்ணையும் பார்த்த லைப் ஜாலி......
என்று அதை கண்டு சிவாவும்
நைட் அட்லி படம் பா்த்து இருப்பான் போல டைலாக் அ புட்டு புட்டு வக்கிறான் என பதில் கமெண்ட் அடிக்கிறார்...இருவருக்கும் போத புல்ல ஏறிவிட்டதை அறிந்த கார்த்திக் தன் பைக்கில் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்....செல்லும் வழியில் பல க்ரைம் படக் காட்சி போல சோதனையை கடக்கின்றனர்....

அழைத்து வீட‍்டிற்கு வரும் வழியில் ட்ரிப்ள்ஸ் மற்றும் ட்ரிங்க் ட்ரைவ் அடித்ததால் டிராப்பிக் போலீஸிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.....
தன் பர்ஸில் இருக்கும் பணத்தை எல்லாம் லஞ்சமாக கொடுத்துவிட்டு அவரிடம் இருந்து தப்பிக்கின்றனர்.....

தன் காதலியின் இடைவிடாத போனாலும்,
முன்னே சென்ற பேருந்தை முந்த ஓவர் டேக் செய்த போது தீடீரென எதிரே பயங்கர வேகத்துடன் லாரி வந்தது....அத கண்டு டக்குனு கீர் குறைச்சி பேருந்தின் பின்னே சென்று மயிரிழையில் உயிர் தப்பனர்....

உயிர் தப்பி வந்த பொழுதும் கூட மீண்டும் ஒரு சிக்கல் வந்தது.....வண்டி தீடிரென ஒரு விதமான பயங்கர சத்தத்துடன் பஞ்சராகி நின்றது....பின்னர் மூவரும் நடந்து சென்றனர்... செல்லும் வழியில் ஒரு மின்கம்பத்தில் லைட் விட்டு விட்டு எரிந்து கொண்டு இருந்தது..... அதை கண்டு பீதி அடைந்தனர்....

கார்த்திக் மேலும் பயமுறுத்தும் விதமாக அவர் காதலியின் வீட்டை நெருங்கியபின் அவர் காதலியை பற்றி கூறுகிறார்....மச்சி உங்க கிட்ட ஒரு உண்மைய சொல்லப் போறேன்டா.... எனக்கு ஒரு காதலி இருந்த டா.....அவள் இப்ப இறந்துட்டா டா என்னால என்று கூறியும் அவர் காதலியின் போட்டாவையும் காமிக்கிறார்.... லவ் பிரச்சனையால் அவன் அப்படி சொன்னாத அவங்க உண்மையாலும் செத்துட்டா என புரிந்து கொண்டனர்....
சிவா எப்படி மச்ச செத்தா என வினாவ இவர்கள் வேறுவிதமாக புரிந்து கொண்டதை தெரிந்து கொண்டான்.....
அவ விபத்தில செத்திட்டா என்றும் இங்க ஆவியா சுத்துறா னு பயமுறுத்தும் விதமாக கூறுகிறார்..... ஜெகன் மச்சி நம்மல பயமுறுத்த பொய் சொல்றான் டா என சிவாயிடம் கூறுகிறார்......

கார்த்தியின் காதலியும் கார்த்திக் இங்கு வருவார் என தெரிந்து வெளியே வருகிறார்....இருவருக்கும் பிரச்சினை தீர்க்கும் இடம் அது......பிரச்சினை ஏற்பட்டால் இருவரும் இங்கு வந்து தீர்வு கண்டு கொள்வார்கள்.....

கார்த்தியின் காதலி வருவதை கண்டு சிவாவும் ஜெகனும் பேய் பேய் என அலறிக் கொண்டு பயந்து தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர்.... கொஞ்ச தூரம் ஓடி இருவரும் ஒரு வீட்டின் கதவை தட்டினர்.... அந்த வீட்டில் ஒரு திருமணம் ஆன பெண் கதவை திறக்க அவரிடம் தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர்.....என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு விதமான பயத்துடனும் தூக்கத்துடனும் வீடு செல்கின்றனர்.....

கார்த்திக்கும் அவர் காதலியும் மனம் விட்டு பேசி ஒன்றாக சேர்கின்றனர்......
கார்த்திக்கும் வீடு போயி சேர்கிறார்.....

மறுநாள் விடிந்தது.....
சிவாவும் ஜெகனும் நேற்று நடந்ததை எண்ணி சென்ற இடமெல்லாம் திரும்பி
செல்கின்றனர்....அவர் தண்ணீர் குடித்த வீட்டின் கதவை தட்டுகின்றனர்......
ஆனால் அந்த வீட்டின் வேறு ஒருவர் கதவை திறக்கிறார்...... வாங்க உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கிறார்...அவர்கள் என்ன பேசுவது என தெரியாமல் வீட்டையை சுற்றி பார்த்தனர்....

அவ்வாறு பார்க்கும்போது ஒரு உள் அறையில் நேற்றிரவு தண்ணீர் தந்த பெண்ணின் முகம் போட்டா ஆகவும் அதில் மாலை அணிந்து இருப்பதையும் கண்டு மயக்கம் உற்றனர்.....

மீண்டும் ஒரு சத்தத்துடன்.....
டே விடிந்திருச்சி எழுந்துரு டா என சிவாவின் அன்னையின் குரல்.. ஓ இது எல்லாம் கனவா என எழுகிறார்.....

எழுந்து உட்கார்ந்து இருக்கும் பொழுது கார்த்தியின் மொபைலில் இருந்து சிவாவிற்கு கால் வருகிறது......

எழுதியவர் : பிரகாஷ்.வ (25-Nov-16, 7:39 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : oru naal oru kanavu
பார்வை : 637

மேலே