சிவப்பு நாடா
அன்று திங்கட்கிழமை. நேரம் காலை பத்துமணி. பல வசதிகளைக் கொண்ட குளிரூட்டிய, உதவி அரசாங்க அதிபரின் (Asst Govenrment Agent) எஜிஏ (AGA) ஓபீஸ் அது. உதவி அரசாங்க அதிபருக்கென அவரின் பெயர் பலகையோடு பிரத்தியேக அறை. அலுவலகத்துக்கு வேலை நிமித்தம் வரும் பொதுஜனம் அமர்வதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில், அவர்கள் வசதியாக அமர ஆறு கதிரைகள். வந்தவர்கள் வாசிக்க ஓரத்தில் உள்ள மேசையில சில பத்திரிகைகளும் சஞசிகைகளும். சுவரில் பல அறிவித்தல்களைக் கொண்ட நோட்டீஸ் போர்ட்.
உதவி அரசாங்க அதிபர் நடராஜா தவிர்த்து எட்டுபேர் லிகிதர்களாக வேலை செய்யும் அலுவலகத்துக்கு அன்று காலை வேலைக்கு வந்திருந்தவர்கள் ஆறு பேர் மட்டுமே. சனி, ஞாயிறு தினங்களில் வேலை இல்லாததால் திங்கட்கிழமையில் லீவு எடுத்து வீட்டில் நின்றுவிடுவது பல லகிதர்களின் வழக்கம். ஒபீசில் இருந்தவர்களில் இருவர் அன்றைய தினப்பத்திரிகையை வாசித்தபடி இருந்தார்கள். ஒருவர் தன் மேசைக்கு முன்னே அமர்ந்திருந்தவரரோடு பேசிக் கொண்டிருந்தார். இருவர் மேசையில் பியோன் கொண்டு வைத்த கோப்பியை சுவைத்தபடியே பைல்களை புரட்டிப் பார்த்துக்;கொhண்டிந்தார்கள். பிரதம லிகிதரின் கதிரை காலியாக இருந்தது. ஒபீசில் வேலை செய்பவர்களுக்கு எடு பிடி வேலை செய்யும் பியோன் சிவராசா பிரதம லிகிதரையும் உதவி அரசாங்க அதிபரையும் சந்திக்க வந்தவர்களுக்கு அரணாக இருந்து, பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அவனைத் தாண்டி எவரும்; அலுவலகத்தில் உள்ளவர்களை சந்திக்கமுடியாது. சிவராசாவுக்கு ஏஜிஏ ஒபீசில் இருபது வருஷ சேவை. மூன்று ஏஜிஏக்களுக்கு கீழ வேலை செய்தவன். நடராஜா அவன் சேர் போடும் நாலாவது ஏஜிஏ. அவனுக்கு எநத கடையில எந்த பொருள் மலிவாக வி;ற்கிறார்கள் என்ற விபரம் தெரியும். ஆதனால் ஏஜீஏ நடராஜா தன் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வீட்டுக்குப்போக முன் சிவராசாவைக் கொண்டே வாங்கிவிடுவார்.
அலுவலகத்துக்கு அலுவலாக வந்த சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவரின் பார்வையில் இருந்து அவரை யாரையோ சந்திக்க வந்திருக்கிறார் எனறு; பியோன் சிவராசா ஊகித்துவிட்டான்.
“யாரை ஐயா பார்க்க வந்திருக்கிறயள்”? சிவராசா வந்தவரைக் கேட்டான்.
“உதவி அரசாங்க அதிபரைச் சந்திக்க வேண்டும். அவர் இருக்கிறாரா”? வந்தவர் கேட்டார்.
“மன்னிக்கவும். ஐயா ஒரு மீட்டிங்கிற்கு ஜிஏ ஒபீசுக்குப் போய்விட்டார். அவர் வர மூன்று மணித்தியலமாகும்”
“ அப்போ நான் பிரதம லிகிதரைச் சந்திக்கலாமா”?
“ அவர் இண்டைக்கு அரை நாள் லீவு. பகல் ஒரு மணிக்கு பிறகு தான் வருவார். ஏதாவது முக்கிய விஷயமாக அவரைச் சந்திக்க வேண்டுமா”?
“ ஓம். கனடாவில் இருக்கும் என் மகன் இந்த ஊரில் ஆடைகள உறபத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க இருக்கிறார். அதைபற்றி பேச வந்தனான்”.
“ இது வெளிநாட்டு சம்பந்தப்பட்ட விஷயம். அதைபற்றி ஏஜீஏ ஐயாவோடு தான் நீங்கள் நேரடியாகப் பேசவேண்டும்”; சிவராசா சொன்னான். அவனுக்கு எவரை ஏஜீஏயை சந்pக்க அனுமதிக்க முடியும் என்று தெரியும். அவனைத் தான்டி ஏஜிஏயையோ பிரதம லிகிதரையோ எளிதில் எவராலும் சந்திக்க முடியாது.
“ அப்ப தம்பி நான் மூன்று மணிக்கு வந்து அவரைச் சந்திக்கிறன். இதோ என்டை பிஸ்னஸ்கார்ட் இதை அவரிடம் குடும்” முதியவர் விடைபெற்றார்.
வேலை செய்பவர்கள் மேசைகளில் இன், அவுட், என ஆங்கிலத்தில் எழுதிய மரத் தட்டுகளில் பைல்களால் நிறைந்திருந்தன. அப்பைல்கள் பல சிவப்பு நாடாவால் கட்டப்பட்டிருந்தன. இந்த சிவப்பு நாடா கலாச்சாரத்தை பிரித்தானியர் தமது ஆட்சியின் போது அறிமுகப்படுத்தினார்கள். எந்த காரியமும் முறைப்படி, பரிபாலன விதிப்படி நடக்க வேண்டும் என்பதை சிவப்பு நாடா எடுத்துக்காட்டுகிறது.
அந்த அலுவலகத்தில், சுவர் ஓரத்தில் ஐந்து அலுமாரிகள் நிறம்பப் பைல்கள். அப்பைல்களில் தேவைபட்டவை எங்கிருக்கிறது என்பது சிவராசாவுக்கு மட்டுமே நன்றாகத் தெரியும். அலுவலகத்தில் வேலை செய்பவர்ளுக்கு ஏதாவது ஒரு பைல் தெவைப்பட்டால் சிவராசாவின் உதவியைத் தான் ஒபீசில் வேலைசெய்பவர்கள்; ; நாடுவார்கள்.
முதியவர் வந்து சென்று சில நிமிடங்களுக்குப் பி;ன் ஒரு தம்பதிகள் வந்தார்கள்.
“யாரை பார்க்க வந்திருக்கிறயள்”? சிவராசா அவர்களிடம் கேட்டான்.
“ எண்டை பெயர் செலலையா. ரிட்டையர்ட் ஸ்டேசன் மாஸ்டர். இது என் மனைவி பாக்கியம். எங்கடை காணியும், வீ;டும் விஷயமாக நாங்கள் ஒரு கிழமைக்கு முன்பாக வந்து ஏஜிஏயிடம் கொடுத்தோம். அந்த மனுவுக்கு என்ன நடந்தது என்று அறிய வந்திருக்கிறோம்”.
“ காணி சம்பந்தப்பட்ட முறைப்பாடு என்றால் பெரிய ஐயாவோடை தான் நீங்கள் பேச வேண்டும். அவர மீட்டிங் ஒன்றுக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்குப் போய் விட்டார். அவர வர சில மணி நேரமாகும்”
“ அவரை போன கிழமை சந்தித்து மனு கொடுத்தனாங்கள். அவர் அதை வாசித்துவிட்டு தேiவாயான நடவடிக்கை எடுக்கும் படி அந்த மனுவில் ஓடர் போட்டு, அதோ இருக்கிறாரே அந்த கிளார்க்கிடம் கொடுத்தவர். ஒரு கிழமைக்கு மேலாகிவிட்டது. என்ன நடக்கறது என்று கேட்க வந்திருக்கிறம்”..
சிவராசா வந்த தம்பதிகளை அவர்கள் காட்டிய கிளாரக்கிடம் அழைத்த சென்றான்;. பத்திரிகை ஒன்றை வாசித்து கொண்டிருந்த அவர், அதை மடித்து வைத்து விட்டு வந்தவர்களை நிமிர்ந்து பார்த்;தார்
“சேர் இவையள் தாங்கள் ஒரு கிழமைக்கு முன் கொடுத்த மனுவைபற்றி விசாரிகக்; வந்திருக்கினம்;” சிவரசா கிளரக்கர் கணபதிப்பி;ள்ளையிடம் சொன்னான்;.
வந்த தம்பதிகளை தன் முன் இருந்த கதிரைகளில் அமரும்படி சைகை மூலம் காட்டினார் கணபதிப்பி;ள்ளை. அவர் பத்து வருடங்களாக ஏஜிஏ ஒபிசீல் வேலை செய்யும் கிலாஸ் ரூ கிளரிக்கல் சேவண்ட்;. ஒபிசீல் இருந்து அரை மைல் தூரத்தில் அவர் வீடு இருந்தபடியால் ஒபீpசுக்கு கால்நடையாக வந்து போவதால் பஸ் செலவு அவருக்கு இல்லை. இரு தடவை அவருக்கு அறுபது மைல்களுக்கு அப்பால் உள்ள ஏஜிஏ ஒபீசுக்கு மாறுதல் கிடைத்தும், தனது அரசியல செல்வாக்கைப் பாவித்து டிரான்ஸ்பரை நிறுத்தியவர் கணபதிபிளளை. அந்தப் பகுதி எம்.பி அவரின் தாய் வழிச் சொந்தக்காரன்.
“ ஐயா போன கிழமை எங்கடை காணியும் வீட்டையும் பற்றி நாங்கள் கொடுத்த மனுவுக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறியல் என்று கேட்க வந்தனாங்கள்” வந்தவர் சொன்னார்.
“ ஓ இப்ப எனக்கு நீங்கள் இருவரும் ஒரு கிழமைக்கு முதல் ஏஜீஏயை சந்தித்தது என் ஞாபகத்துக்கு வருகுது. ஏஜிஏ உங்கள் மனுவை வாசித்துவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி எழுத்தில் மனுவில் ஓடர் போட்டிருக்கிறார். நான் உங்கடை மனுவை வாசித்தனான். உங்கடை பிரச்சனை ஒரு சிக்கலான பிரச்சனை.” முகத்தைச் சுழித்தபடி கணபதி சொன்னார்.
“ அப்படி என்ன சிக்கலான பிரச்சனை? அந்த காணியும் வீடும் எங்கடை பரம்பரைக் காணி. எங்கடை அனுமதி இல்லாமல் பாதுகாப்பு என்று சொல்லி ஆர்மி எடுத்துப்போட்டுது. இப்ப இரண்டு வருசத்துக்கு மேலாகிவிட்டது. இப்ப போரும் நிண்டு போச்சு. இனி ஏன் ஆர்மிக்கு எங்கடை வீடும் காணியும் தேவை? எங்களை காணியையும் வீட்டையும் போய் பார்க்கக் கூட விடுகினம் இல்லை”, அழாத குறையாகச் செல்லையர் சொன்னார்.
“ ஆர்மி அந்த வீட்டிலை இருப்பது தான் பிரச்சனை. உங்கடை காணி இருபபது பாதகாப்பு வலையத்துக்குள். சில மாதஙகளுக்குமுன் உங்கடை வீட்டுக்கு கிட்ட பெடியன்கள் பொம் வைச்வங்கள். ஆர்மி இந்த நாட்டை பாதுகாப்பவர்கள் ஆகவே இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். இதை பற்றி ஏஜிஏ தீர்மானிக்க முடியாது. இது உயர் மட்டத்து அதிகாரிகள் தீரமானிக்க வேண்டிய விஷயம். இதை நான் ஏஜிஏயுக்கு சொன்னான். அவர் இநத ஒபீசக்கு மாற்றலாகி வந்து மூன்று மாசம்.. அவர் உஙகடை மனுவைப் பற்றி விபரமாய் மேலிடத்துக்கு ஒரு அறிககை தயாரிக்கும்படி இதோ எழுதியிருக்கிரார் என்று பைல் ஒன்றில் இருந்த மனுவை வந்தவர’களுக்கு ஏஜிஏ எழுதியதைக் காட்டினார் கணபதிபிள்ளை.
“ அப்ப ஏஜிஏ சொன்னபடி மேலிடத்துக்கு அறிககை தயாரித்து விட்டீரா?
“ தயாரிப்பதற்கு மேலதிக தகவல்கள் தேவை. வீட்டின் உயில் உங்களிடம் இருக்கிறதா?. நீங்கள் தான் சொந்தக்கார் என்பதை அறிக்கையில ஆதாரத்தோடு ; காட்டவேண்டும்”?
“ இருக்கிறது. உயிலின் பிரதி தரலாம்”
“ அதுமட்டும்; போதாது. விதனையாரிடமிருந்து நீங்கள் முந்தி அங்கு வசதித்ததாக ஒரு கடிதம் தேவை.”
“ பிரச்சனை இல்லை. அதையும் வாங்கித்தரலாம்”
“ அதுமட்டுல்ல நீங்கள் விPட்டில் வாழ்ந்த போது கட்டிய மாநகரசபை வரியின் ரசீது, எலக்டிரிசிட் அல்லது வோட்டர் பில்லின்பிரதிகள் தேவை.”
“ அது மட்டுமா? அல்லது; அது எங்கடை காணியெண்டு; என்று நிரூபிக்க வேறு பத்திரம் எதாவது தேவையா?
“ தேவையில்லை ஏஜிஏ இராணுவ அதிகாரியோடு பேசி, அவரோடு போய் உங்கடை வீட்டை பார்க்க வேண்டும்.”
“ எதையும் உங்கடை முறைப்படி செய்யுங்கள் எனக்கு வெகு கெதிலை வீடும் காணியும் திரும்ப கிடைக்க வேண்டும். என் மகளுக்கு கலியாணம் பேசி ஒழுங்காயிற்று. அந்தக் காணியும் வீடும் சீதனமாக கொடுக்கிறதாகப் பேச்சு. வீட்டிலை ஆர்மி இருக்கிறபடியால் அதை விற்கமுடியாது. ஒருத்தரும் வாங்க முன் வரமாட்டினம்”.
“ நீங்கள் இந்த நிலையில் அந்த வீட்டை சீதனமாக கொடுகலாமோ இல்லையா என்று எனக்கு; தெரியாது. எதற்கும் நான் சொன்ன பத்திரங்களோடு வந்து ஏஜிஏ வோடு சந்தித்துப் பேசுங்கள். அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்” கணபதி சொன்னார்.
செல்லையர் தம்பதிகள் தாங்கள் வந்த காரியம் முடியாத ஏமாற்றத்தோடு சென்ற ஒரு மணித்திhயலத்துக்குப்பின் ஏஜிஏ நடராசர் மிட்டிங் முடிந்த வந்தார்.
ஏஜிஏ நடராஜா வந்ததும் வராததுமாய் கணபதியை தன் அறைக்குள் அழைத்து
“ கணபதி யாராவது என்னை காண வந்தார்களா”? என்ற கேட்டார்.
“ ஓம் சேர். அந்த ரிட்டையர்ட் ஸ்டேசன மாஸ்டர் செல்லையரும் அவர் மனைவியும் தான தங்கடை வீட்டு விஷயமா உங்களைக் கண்டு பேவ வந்தவையள். நான் அவையளுக்குச் சொன்னேன் அவர்களின் பிரச்சனை பற்றி ஜிஏயுக்கு ஒரு அறிககை எழுத சிவ பத்திரஙகள் தேவை என்றும், அதோடு நீங்கள் ஆர்மி மேஜரோடு போய வீட்டை பார்க்கவேண்டும் என்று சொன்னன்”;,
“ சரியாக சொன்னீர். நான்ன இரண்டு தடவை ஆரமி ஒபீசுக்க போன் செய்தனான். மேஸர் பெரெரா முக்கிய மிட்டிங்கிற்கு கொழும்புக்குப் போய் விட்டாராம். அவர் திரும்பி வர ஒரு கிழமை எடுக்குமாம்; ஆதற்கு பிறகு அவரோடு போய் வீட்டை நான் பார்த்துப் பேசி, அவர் என்ன சொல்லுகி றார் என்றதைப் பொறுத்தது. எனக்கு ஆரமி விட்டடை காலி பண்ண அவர் சம்மதிப்பாரொ தெரியாது. போர் முடிந்தாலும் இன்னும் பாதுகாப்பு தேவைபடுகிறதாம். ஆந்த வீடு பாதகாப்புக்கு ஏற்ற சந்தியில் இருக்கிறது.”
ஏஜஏ, கணபதிக்கு ரிப்போரட்டை வெகு விரைவில் தயார் செய்யும்படி கட்டளையிட்டார்.
கணபதி ஏஜிஏ யின் அறையை விட்டு வெளியேறியதும் பியொன் சிவராசா அறக்குள் வந்து.
“ சேர் யாரோ ஒரு முதியவர் உங்களை பார்க்க வேண்டும் என்று மூன்று மணித்தியாலங்களுக்கு முதல் வந்தவர். அப்ப நீங்கள் ஜிஏ ஒபீசுக்கு கூட்டத்துக்கு போயிட்டியள். இப்ப அவர் திரும்பவும்; வந்திருக்கிறார் உங்களைப் பார்த்து ஏதோ முக்கியமான விஷயம் பேசவேண்டுமாம். அவரை வரச்சொல்லட்டா சேர்”? சிவராசா கேட்டான்.
“ நான் இன்னும் மதியபோசனம் கூட சாப்பிடவில்லை. அரைமணித்தியாலம் அவரை இருக்கச் சொல் நான் கூப்பிடும் போது வரச்சொல்”.
“ சரி சேர்.”
ஒரு மணதிதியாலத்துக்குப்பின், ஏஜிஏயை காண வந்த முதயவரை ஏஜிஏயின் அறைக்குள் போக அனுமதி கிடைத்தது.
“ வாருங்கோ ஐயா. அமருங்கள். நான் கொஞ்சம் பிசி. என்ன விஷயமாக வநத நீஙகள் என்று சுருக்கமாக சொல்லுங்கோ,” டீஜிஏ சொன்னார்
“ சேர் எண்டை மகன் கனடாவிலை பெரிய பிஸ்னஸ்மன். சொந்த ஊரான இங்கு ஒரு ஆடைகள் தயாரிக்கும் பக்டரி ஒன்றை தனது வெளிநாட்டுப பணத்தில ஆரம்பிக் போராராம். அறுபது பெண்களுக்கும் இருபது ஆண்களுக்கும்; வேலை வாய்ப்புண்டாம்;. அதைப் பற்றி உங்களை சநதித்து பெசச் சோல்லி கடிதம் எழுதியிரக்கிறான். அது தான் அதைப் பற்றி பேச வந்னான்.”
“ அடடா அது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால். இது வெளிநாட்டு பிரஜா உரிமையுள்ளவரின் முதலீட்டு விஷயமாச்சே. அதனாலை வெளிநாட்டு அமைச்சால் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நானோ அல்லது ஜிஏ யோ தீர்மானிக் முடியாது.”
“ அப்ப என்ன செய்யச் சொல்லுறியல் ஐயா”
“உங்கடை மகனை கனடாவில் இருக்;கும் சிறீ லங்கா அம்பசடரை அலலது அவரின் உதவியாளரை சந்தித்துப் பேசச் சொல்லுங்கள். கனடாவிலை உள்ள இலங்கை தூதராலயம் இங்கை உள்ள வெளிநாட்டு அமைச்சோடு தொடர்பு கொண்டு ஆவன செய்யும். அது சரி மகன் எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறார. “
“ கிட்டத்தட்ட பத்து மில்லியன் கனேடியன் டோலர்கள் சேர்”
“ பெரிய தொகை ஆச்சே. விரைவில் காரியமாக வேண்டுமானால் வெளிநாட்டு அமைச்சின செயலாளரோடு அல்லது மந்திரியோடை உங்கடை மகனை நேரடியாகத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கோ. பத்து மில்லியனை விட கொஞசம் கூட செலவாகும். நான ஏன் சொல்லுகிறன் எண்டு; விளங்கிச்சே’?
வந்தவர் சிறிது நேரம் பதில் சொல்லாது யோசித்தார்”.
“ என்ன ஐயா யோசிகிகிறியள்.”
“ ஒண்டுமில்லை. நீங்கள் சொன்னதை மகனுக்குச சொல்லுகிறன். அவன் எ;ன்ன சொல்லுகிறானோ தெரியாது. ஆனால்..”
“ ஆனால் என்ன..?
“சொநத நாட்டில் முதலீடு செய்ய இவ்வளவு சிவப்பு நாடா வெள்றால், சில வேலை அவன் சிங்கப்பூரில் அல்லது தூபாயில் முதலீடு செய்ய யோசிக்கலாம்” என்று சொல்லிவிட்டுமுதயவர் நன்றி கூட சொல்லாமல் அதிருப்தியோடு எழுந்து சென்றார்.
******
திரும்பவும்; போர் ஆரம்பித்ததற்கு அறிகுறிகள் தெரிந்தது.
“ இனி ஸ்டேசன் மாஸ்டர் செல்லையருக்கு வீடு கிடைத் தமாதிரி தான் அவர் வீட்டிலை இருக்கிற ஆர்மி இனி எழும்பமாட்டாங்கள்”, என்றார் கணபதி தனக்குப் பக்கத்து சீட்டில் இருந்த கிளாக்கர் முருகேசுவிடம்”.
அதைக் கேடடுக் கொண்டிருந்த பியோன் சிவராசா “ ஐயா செல்லையருக்கு அவர் வீடு இருந்தால் தானே திரும்பி கிடைக்க” என்றான்.
“ ஏண்டா சிவராசா, ஏன் அப்படி சொல்லுகிறாய்;?’ கணபதி கேட்டார்.
“ பெடியன்கள் நேற்று இரவு செல்லையர் வீட்டிலை இருந்த ஆர்மியை தாக்கி அங்கை இருந்த ஆர்மிக்காரரகள்; ஆறுபேரை முடிச்சுப்போட்டாங்கள். வீடும் தரைமட்டம்” என்றான் சிவராசா.
“ அப்படியா. காணி சரி செல்லையருக்கு மிஞ்சிச்சே. எனக்கும் வேலை குறைஞ்சிட்டுது?, என்றார் ஸ்டேசன் மாஸ்டர் செல்லையர் மேல் அனுதாபப் பட்டவர் போல் கணபதி.
******
“

