இரவல் வெளிச்சம் --முஹம்மத் ஸர்பான்
![](https://eluthu.com/images/loading.gif)
முன்பனி இரவுகளில்
பனித்துளிகளின் வெளிச்சம்
மார்கழி வெள்ளத்தில்
நீல நதிகளின் வெளிச்சம்
வசந்த காலங்களில்
பூக்களின் வெளிச்சம்
இலையுதிர் காலங்களில்
சருகுகளின் வெளிச்சம்
மரணத்தின் விளிம்பில்
மின்மினிகளின் வெளிச்சம்
கல்லறை தூக்கத்தில்
மண் புழுவின் வெளிச்சம்
ஏழைக் குடிசையில்
மெழுகின் வெளிச்சம்
கடலோர விழிகளுக்கு
கலங்கரை வெளிச்சம்
நந்தவன அமைதியில்
விண்மீன்கள் வெளிச்சம்
தேவதை மாளிகையில்
வெண்ணிலவின் வெளிச்சம்
காரிகை நாணத்தில்
வானவில்லின் வெளிச்சம்
விதவையின் அறையில்
நினைவுகளின் வெளிச்சம்
கவிஞனின் தமிழுக்கு
சிந்தைகள் வெளிச்சம்
படைப்பின் எழிலில்
விந்தைகள் வெளிச்சம்
உள்ளங் கைக்குள்
ரேகைகள் வெளிச்சம்
ஒளிரும் வெளியில்
இரவல் வெளிச்சம்