ஆறுதல்

பணம் எடுக்க
பல மணிநேரமாய்
கால் கடுக்க
பகலவன் வெயிலில்
படாத பாடுபட்டு
நின்ற போதும்
அதிக நேரமாகவில்லையென
ஆறுதல் அளித்தது
ஓடாமல் நின்ற
எனது கைக்கடிகாரம்...

எழுதியவர் : இராகுல் கலையரசன் (26-Nov-16, 10:51 am)
Tanglish : aaruthal
பார்வை : 180

மேலே