உரு மாறிய ஓர் கிராமப் பெண்

வட்ட வட்ட உன் முகத்த்தில்
மஞ்சள் பூச்சில்லை
குங்கும பொட்டுமில்லை
கார்மேக கூந்தலை
ஏனோ நீ சீவி முடிக்கவில்லை
சினம் கொண்ட கண்ணகிபோல்
அதை கட்டவிழ்த்து விட்டு விட்டாய்

அழகிய நீண்ட உன் கழுத்தினை
தொட்டணைக்க தங்க மாலை இல்லை
கட்டிய தாலியும் இல்லை
வண்ண செவிகளில் குந்துமணி
தங்கமில்லை ,மூக்கில் கெம்பு திருகுமில்லை


இளமை எழில் பொங்கும்
உந்தன் வடிவழகை
போர்த்தி மறைக்க
தமிழ் சீலை இல்லை
ஆங்கில உடை
அலங்காரம் ஏனோ
எனக்கு புரியவில்லை

இடுப்பில் ஒட்டியாணம் இல்லை
செந்தாமரை கால்களில்
கொலுசும் இல்லை
கால் விரல்களில் மெட்டியும் இல்லை

மேற்கத்திய நாகரீகம்
உன்னை ஆட்டி படைக்க
இன்று முற்றிலும் உரு மாறி
என் முன் நிற்கின்றாய்

அன்று முதல் முதலாய்
உன்னை கண்டபோது
கடைந்தெடுத்த தமிழ் பதுமையாய்
காட்சி தந்தாய்
உன்னில் தெய்வீக ஒளி கண்டேன்

இன்றோ முற்றிலும் மாறிய
உன் உருவத்தில்
நான் பார்க்கும் எழில் இல்லை
என் கண்ணம்மா ,உனக்கு
ஒவ்வாத இந்த உரு மாற்றம்
தேவைதானா

நீ தானா நேற்று நான் பார்த்த
என் கிராம தேவதை
கண்ணம்மா என் மாமன் மகளே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Nov-16, 4:01 pm)
பார்வை : 101

மேலே