புதையல்

ஈரடியில் ஓர் கவிதை !
இல்லாததும் இல்லை ;
வள்ளுவனும் வாழ்கின்றான்-
புதையலாக !
தேடியவன் சோர்வதுமில்லை !
விளங்கியவன் வீழ்வதுமில்லை !

புருவத்தை உயர்த்தும் -
புதுப்புது கண்டுபிடிப்புகள் !
புதையல் என்பது -
கண்டுபிடிப்பா ?
கண்டுபிடிப்பாளரா ?

குதூகலமில்லா -
குடும்பத்தாரிடம் ;
புதையல் கிடைத்தால் -
புரையோஜனமும் உண்டோ ?

தவம் பல கிடந்து -
பிள்ளை பெற்றவளுக்கே தெரியும் !
புதையல் என்பது -
பொருளல்ல !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (26-Nov-16, 5:20 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 201

மேலே