இப்படியும் கருப்பு வெள்ளையாகுது சிந்திக்க, சிரிக்க
வங்கி வாசலில் ஒரே கூட்டம்
நரிக்குறவர், பிச்சைக்காரர்கள்,இன்னும்
சில சிலரை வியாபாரிகள் , கையில்
வங்கி புத்தகம் மற்றும் , பைகளில்
கத்த கத்த யாய் ரூபா நோட்டுகளுடன்
நிற்கிறார்கள் .............. வங்கி திறக்க போகுது
வங்கி மேனேஜர் வெளியே வந்து பாக்கறார்
கூட்டத்தின் காரமும் கேக்கறார்; அப்போ தெரியுது
இவங்க எல்லாம் பணம் டெபாசிட் செய்ய வண்டவாங்கனு
அப்போ , மேனேஜர் கும் நிற்பவர்களுக்கு இடையே ஒரு உரையாடல்
மேனேஜர் : கொஞ்சம் நீங்க எல்லாம் கியூ ல வந்து நில்லுங்க உங்க
பணத்தை டெபாசிட் செஞ்சுட்டு போய்டலாம் .....ஆனா
அதுக்கு முன்ன எனக்கு ஒன்னு தெரியணும் .......உங்கள
யார் இங்க பணம் போடா அனுப்பினாங்க ?
கியூ ஆசாமிங்க : ஐயா மேனேஜர் ஐயா ! நாங்க ஏழைங்க இருந்தாலும்
வாய கட்டி, வயிர கட்டி வருஷ கணக்கா சேர்த்து வெச்ச பணமுங்க
இதை ஐநூறு, ஆயிரம் நோட்டுகளா மாத்தி வெச்சிக்கிட்டு இருந்தோம்
இவை செல்லாதுன்னு சொன்ன உடனே வங்கில சேர்த்து மாத்திக்கலாமுன்னு
கொண்டாந்துங்க .......யாரும் குடுத்து அனுப்பலன்க ..........
மேனேஜர் : சரி இதுக்கு டாக்ஸ் கட்டணும் தெரியுமா ?
கியூ ஆசாமிங்க : எங்களுக்கு டாக்ஸ் பத்திலாம் தெரியாதுங்க ; ஆனா ஒன்னு தெரியுமுங்க
தாஸ் இல்லா தொகைக்கு தாஸ் எப்படிங்க .........................
மேனேஜர் (கியூ ஆசாமிங்க யாரு கருப்பையா வெள்ளையாகி தரவந்த அக்கௌன்ட்
ஹோல்டேருங்க னு தெரிஞ்சும் அவங்க பதிலுக்கு ஒன்னும் சொல்ல தெரியாம
கணக்கரிடம் பணத்தை வாங்கி என்ட்ரி போட்டு தர சொல்லறாரு ,வேறு
வலி இல்லாமல் )
இந்த கருப்பு பணத்தை வெள்ளையாக்க புத்தி இப்படிலாம் வேலைசெய்யுது
அப்பப்பா.............கடவுள்தான் நாட்டை காப்பாத்தணும் னு தனக்குள்ள
சொல்லுகிறார். !!!!!!!!