பணப்பரிமாற்றம்

படாசாலை செல்லாமல் பட்டம் பெற்றால்
மனப்பரிமாற்றம் இல்லாமல் பணப்பரிமாற்றம் -இஙகே

ஒருவகை ஆற்றல் மற்றொரு வகை ஆற்றலாக
மாற்றலாம் எனில் இவள் மற்ற ஆற்றல்
பயன்படுத்த வழியில்லையோ -பசி தீர்க்க
ஆற்றல் மூலத்தை பறித்தவன் எவன்
அரசனா? அசூரனா ?

மஞ்சம் தான் பிழைப்பு மிச்சம்தான் என்ன!
யோனிக்குழலை வாடகைக்கு விட்டு
உணவு குழலை நிரப்பும் நிலை ஏனோ !

முட்டு சந்தில் நின்று முகமூடி
மனிதனில் மிருகத்தை இனம் கண்டு
நெருங்கி தேவை கேட்டு
விலை ஒன்று பேசி
படியாமல் போனால்
பசிதானே மிஞ்சுமென
ஒத்து ஒதுங்கி இவள் படும் பாடு ......

வாங்கிய நாணயத்தில்
வாசனை திரவியம் கொஞ்சம்
வாடா மலர் கொஞ்சம்
வண்ண சாயம் கொஞ்சம்
காவல் முனி கையில் கொஞ்சம்
கொடுத்தது போக மிட்சத்துக்கு
தள்ளுவண்டி கூல் குடித்து
காலம் கடத்தி விட்டால்

வயது முதிர்ந்து வாழ்வு வினா(வீனா)னது
வறுமைக்கு தேடிய வழி
வாழ்வின் எல்லை வரை வரவில்லை

பள்ளி வாசல் முன் தின்பண்டம் விற்கும் தொழில்
அன்றே தேர்தெடுத்திருந்தால்
வாழ்வு வசந்தமாயிருக்கும்

உறவில்லாம் பாட்டியானால்
மனத்தோடு (மானத்தோடு )
பணப்பரிமாற்றம் இஙகே .

எழுதியவர் : வே ராமகிருஷ்ணன் (28-Nov-16, 1:46 pm)
சேர்த்தது : இராமகிருஷ்ணன் வெ
பார்வை : 157

மேலே