இராமன் - இராவணன்

பிச்சை கேட்டான்
இச்சை அடைவதற்கு
மனம் இல்லாதவனாயல்ல
மணம் புரிந்தவனாய்
இல்லறம் நடத்த
சீதையிடம் இராவணன்...
கொச்சை படுத்தினான்
இச்சை அடைந்திருப்பாளென
மனம் இல்லாதவனாய்
மணம் புரிந்தவனாய்
உயிர் காக்க
உடல் இழந்திருப்பாளென
சந்தேக மன்னனாய்
சீதையிடம் இராமன்.....
#இராமன் - இராவணன் எனது கோணத்தில்