குடிசை வீடு
தென்னை ஓலைக் கீற்று வேய்ந்து
மண் தரையில் கோரைப்பாய் விரித்து
கூரைக்குள் வரத்துடிக்கும் நிலவினைப் பார்த்து
விழிகளில் நீங்காத நினைவுச் சின்னம்......
நெல்மணிகள் உரலில் உலக்கையால் இடித்து
ஆவலோடு அவுளை அள்ளித் தின்று
உறவுகளோடு கொஞ்சி மகிழ்ந்த நிமிடங்கள்
இதயத்தின் வாசலில் விம்பங்களாய் ஓடுது......