சீதையின் இராமன்

பூவே உன் விழிப் பார்வையில்...
நான் பூத்துவிட்டேன் போட்டி மேடையில்...
தேனே உன் இதழ் அசைவில்...
நான் ஒடித்துவிட்டேன் தனுசை விசையில்......
தோகை மயிலின் அழகைக் கண்டேன்...
வாகை நானும் சூடி நின்றேன்...
கலங்காதே பொன் மானே...
கழுத்தில் மாலைச் சூடுவேனே......
பூவே உன் விழிப் பார்வையில்......
வில்லை ஒடித்திட
எல்லோரும் இங்கு வியந்தாரே...
சொல்லை விடுத்து
கேள்வி கணைத் தொடுத்தாரே...
சபை யெங்கும் அதிர்ந்து போகிட
சத்தம் போட்டு யுத்தம் செய்தனரே......
வாளை வேந்தர்கள் வீச வந்ததும்
காளையெனப் பாய்ந்து இளையவன் தடுத்தானே......
பூவே உன் விழிப் பிர்வையில்லை......
வில்லைப் பார்த்து பரசுராமரும் சினம் கொண்டாரே...
முல்லைச் சொல்லில் அவரும் சினம் தணிந்தாரே.......
கோப மொழிகள் பேசி வந்தவரே...
ஆசி மொழிகள் கூறிச் சென்றாரே......
மாலை சூடி மங்களம் பாடியதும்
சீதையை நானும் மணந்தேனே......
பூவே உன் விழிப் பார்வையில்......