எனதுக் கனவுகள்

வான் மழையில் தேகம் நனைந்து
மான் விழியாள் மோகம் இணைந்து
தலைத் துவட்டும் தனிமையின் நிமிடங்கள்...
அதிசய விண்கலம் பூமியில் இறங்கிட
அதிலேறி இளமைக் காலத்திற்கு திரும்பிட
நினைவுகளை நிசங்களாய் பார்த்திடும் நாட்கள்...
காலத்தின் சக்கரம் பின்னோக்கிச் சுழன்று
இயற்கை விரித்தப் பசுமையின் போர்வையில்
மன்னராட்சியில் மாவீரனாய் வாழ்ந்திடும் காலங்கள்
என்விழிகள் வாங்கும் வண்ணக் கனவுகள்......